![]() |
Memberlist Calendar Search |
![]() |
| |
| Entertainment | |
| |
|
| Page of 25 Next >> |
| Author | Message | |
|
whossane
Senior Member
Joined: 19/November/2007 Posts: 637 |
![]() Topic: Rasiththa pira mozhi padangalPosted: 22/August/2010 at 9:33am |
|
|
இன்ஸெப்ஷன் வெங்கி அவர்களின் பிரமிப்பை நானும் வழி மொழிகிறேன். அவரவர் புரிதல் பார்வைக்கு ஏற்றாற் போல் இப்படத்தினை அணுகலாம். சினிமாவின் அசல் கதாநாயகன் திரைக்கதை என்பதை இப்படம் மீண்டும் நினைவூட்டுகிறது. தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து கமலை வைத்து, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் "இவன் கனவு நாயகன்" என்று தமன்னாவுடனோ அனுஷ்காவுடனோ படம் செய்யாமல் இருக்கவும். விஜய்யை வைத்து பஞ்ச் டயலாக்கோடு இப்படத்தை கெடுக்க வேண்டாம். |
||
IP Logged |
||
|
venkki
Senior Member
Joined: 15/February/2006 Posts: 1304 |
![]() Posted: 22/August/2010 at 7:11am |
|
|
அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கு? கொஞ்சம் விலாவாரியா சொல்லலாமே வெங்கி
-- வால் ஒரு படம் ரொம்பவே கவர்ந்துவிட்டது என்றால் என்ன செய்வோம். விவாதிப்போம்.. எவ்வளவு நேரம்? அரை மணி நேரம்.. ஒரு மணி நேரம்.. ரெண்டு மணி நேரம்.. இப்படி மணி நேரங்களில் முடிந்து போய்விடும். ஆனால் Inception படம் குறைந்தது ஒரு நாள் முழுவதும் பேசக்கூடிய அற்புத படைப்பு. பல தளங்களில், பல பரிமாணங்களில் விரிவடைந்து கொண்டே செல்லக்கூடிய ஒன்று. சிக்கலான ஒரு கதையை நினைத்ததும், நினைத்ததை படத்தில் உருவாக்கியதும், உருவாக்கியதை ஒரு பரிட்சாத்த முயற்சியாக செய்துபார்க்காமல் அதையே ஒரு உன்னத படைப்பாக ஆக்கியதும் இயக்குனரின் இமாலய ஆற்றலாக கருதி வியக்கிறேன். இந்தப் படைப்பை முதல் முறை பார்க்கும் போதே முழுவதும் புரிந்துகொண்ட ஒரு மனிதர் இந்த உலகத்தில் இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை. ஜெயமோகன் சொல்வது போல, படத்தின் கதையை உரையெழுத்துக்களாக ஒருவர் படம் பார்த்தபின் வாசித்தால் அது முழுதாக உள்வாங்கும் ஒரு முயற்சியாக அமையும். படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள். நிறைய பேசலாம். விகடகவி, ஹரி, க்ருஷ், ஜீவா எல்லோரும் படத்தைப் பார்த்திட்டீங்களா? உங்க அனுபவம் எப்படி இருந்தது? |
||
IP Logged |
||
|
prmy
Senior Member
Joined: 22/November/2005 Posts: 2762 |
![]() Posted: 18/August/2010 at 9:45pm |
|
|
Inception got 4 points from TOI.
|
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 18/August/2010 at 10:08am |
|
|
இன்செப்ஷ பார்த்தாகிவிட்டது!
உருவாக்கம் என்றால் இதுதான் உச்சம்! படத்தை பற்றிய பிரமிப்பு அடங்க குறைந்தது ஒரு மாசம் ஆகும் என நினைக்கிறேன். இப்படியொரு ரசிப்பு அனுபவத்தை தந்த நோலனுக்கு எப்படி நன்றியை சொல்வது? அழுத்தமாக கை கொடுக்கலாம்.. எங்கேனும் படைப்பின் விளம்பர போஸ்டர் ஒட்டக் கூட தயார். - வெங்கி அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கு? கொஞ்சம் விலாவாரியா சொல்லலாமே வெங்கி |
||
IP Logged |
||
|
a_grand_jovian
Senior Member
Joined: 17/May/2008 Location: India Posts: 939 |
![]() Posted: 18/August/2010 at 2:35am |
|
|
Inception is really a very good movie. though many people would not understand fully i would strongly recommend it. you have to watch it completely in theatre even a break of 30 seconds may give you confusion.
btw i watched another movie [a japanese animation] PAPRIKA which has similar theme [released on 2006] but a different story. http://www.imdb.com/title/tt0851578/ People who loves animations can see the movie. |
||
IP Logged |
||
|
venkki
Senior Member
Joined: 15/February/2006 Posts: 1304 |
![]() Posted: 17/August/2010 at 2:49am |
|
|
Inception பார்த்தாகிவிட்டது!
உருவாக்கம் என்றால் இதுதான் உச்சம்! படத்தை பற்றிய பிரமிப்பு அடங்க குறைந்தது ஒரு மாசம் ஆகும் என நினைக்கிறேன். இப்படியொரு ரசிப்பு அனுபவத்தை தந்த நோலனுக்கு எப்படி நன்றியை சொல்வது? அழுத்தமாக கை கொடுக்கலாம்.. எங்கேனும் படைப்பின் விளம்பர போஸ்டர் ஒட்டக் கூட தயார். |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 02/August/2010 at 1:25pm |
|
|
சென்ற வாரம் தான் "த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தேன். சமீபத்தில் வந்த படங்களில் நல்ல் ஸ்கீர்ன் ப்ளே உடனும் நல்ல காமெடியுடனும் வந்திருக்கும் படம். Fபாரானுன்(மாதவன்)ராஜுவும் தங்களின் கல்லூரி சகாவை( அமீர்கான்) தேடி செல்கின்றனர் போகிற வழியில் ஃப்ளாஷ் பேக். ரன்வேயில் டேக் ஃஆப் ஆக இருக்கும் ஃப்ளைடில் நெஞ்சு வலிப்பது போல் நடித்து திரும்பி வருகிறார் ஃபரான். பேன்டை கூட மறந்து ஓடி வருகிறார் ராஜூ. இத்தனையும் நண்பன் அமீருக்காக. கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுகுறாங்களேனுதான் தோனும் ஆனா இது அத்தனையும் பில்டப் இல்லை என்பது போகப் போகதான் புரிய ஆரம்பிக்கிறது. சும்மா காலேஜ் போனம் படிச்சேம் பாஸானோம் வேலை கிடைச்சு செட்டில் ஆனோம் என்று இருக்காமல், வாழ்க்கையை நமக்கு பிடித்தது போல தீர்மானித்து மனை நிறைவோடு வாழ்வோம் இதுதான் படத்தின் மெசேஜ். இதை சொன்ன விதம் இருக்கிறதே அது அபாரம். கதாபாத்திரங்கள் தேர்வும் நன்றாகதான் இருக்கிறது.அதுவும் வைரஸ் என்று அழைக்கபடும் போமன் இரானியும், சத்தூர் ராமலிங்கமாக வரும் பொறாமை பிடித்த நண்பனும் சரியாக பொருந்தி இருக்கிறார்கள். படம் முழுக்க நான் ரசித்தது இந்த கதாபாத்திரங்களைதான். சத்தூரின் மெண்டாலிட்டி அப்படியே என் கூட படித்த சில மாணாவ்ர்களை ஞாபக படுத்தியது. சில சந்தேகங்கள் இருக்கதான் செய்கிறது, அவ்வளவு பெரிய காலேஜில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லையே ஏன்? சிம்லாவில் மாதவனும் ராஜுவூம் பேசி கொண்டிருக்கும் போது பின் புறத்தில் சில புர்கா அணிந்த முஸ்லீம் பெண்கள்( முகத்தையும் மூடியபடி) ஃபோட்டோ எடுத்து கொண்டு இருக்கின்றனர் அது சற்செயலாக நடந்ததாமாதி தெரியலை, கேலி செய்வது போல இருக்கிறது.( பத்தவச்சுடியே பரட்ட!) நிற்க! இந்த படத்தை தமிழில் எடுக்க போறாங்களாம் அதுவும் விஜயை வச்சு வெளுங்வானா தமிழன்? இயக்குனர் ஷங்கர், விஜய் போன்றவர்கள் இந்த படத்திற்கு நூறு சதவீதம் பொருத்தமில்லாதவர்கள். இந்த படத்தில் கதாநாயகனின் முகத்தில் தெரியும் அந்த ஃப்ளசன்ட், புத்திசாலிதனம், கொஞ்சம் துறு துறு எல்லாம் சுட்டு போட்டாலும் விஜய்க்கு வராது. இந்த படத்தில் மிக சில இடங்களில் மட்டும்தான் சிஜி ஒர்க் நடத்த பட்டுள்ளது.அதும் படம் பார்க்கும் போது சட்டென தெரியாது. படம் முழுக்க முழுக்க கதாபாத்திரங்களின் ஜாலம்தானே தவிர கம்ப்யீட்டர் ஜாலம் இல்லை. இது எல்லாம் ஷங்கருக்கு ஆவாது, இவருக்கு எந்திரந்தான் சரி. ஒரு வேளை இந்த படத்தை தமிழில் எடுக்கும் வாய்ப்பு உண்டென்றால் அது வெங்கட் பிரபு அல்லது புஷ்கர் காயத்திரியால் தான் முடியும். வெங்கட் பிரபு கூட இதற்கு முன்பு இருந்த தன் டீமை மாற்றினால்தான் சரி வரும். |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 23/July/2010 at 7:02pm |
|
|
பாலேரி மாணிக்கம் - கதையை சொல்ல மறந்துட்டேனே கேட்க மாட்டிங்களா? அது சரி யாரு இருக்கிங்க கேட்க.
கதை இதுதான். சுமார் 40 50 வருஷத்துக்கு முன்பு கம்யூனிஸ்டுகளின் கன்னி ஆட்சி தொடங்கிய சமயத்தில் கண்ணூர் பக்கதில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இரு வேறு கொலைகளுக்குள் உன்டான சம்பந்தம் பற்றி தற்போது துப்பு துலக்ககிறார் ஒரு டிடெக்டிவ் மம்மூட்டி. கொலை செய்யபடுபவர்கள் பாலேரி மானிக்கம் என்ற புது பெண்ணும், ஒரு நம்பூதிரி சாமியாரும். இதை வைத்து மொத்த கதையும். கதையின் ஹை லைட் முஸ்லீம்கள் பெரு வாரியாக இருக்கும் பகுதியான மலப்புரத்தில் முஸ்லீம்ஸ் எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியாக இருந்தனர் என்பதுதான். அட்டவனைபட்டியலை சேர்ந்த சமூகத்தினருக்கு கம்யீனிஸ்ட்கள் மீது இருந்த நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை கம்யூனிஸ்டுகள் போட்டு மிதித்ததையும் எதிலும் லாபம் பார்க்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியினைரையும் போடு வெளுத்துருகாங்க. இந்த படத்தை பற்றி எல்லாம் நமது தமிழ் ஊடகத்தில் யாரவது எழுதி இருப்பாங்களானு தெரியில. யாராவது படிச்சா சொல்லுங்க இல்லைனா பார்த்துட்டு கொஞ்சம் எழுதுங்க. |
||
IP Logged |
||
|
manasaatchi
Senior Member
Joined: 11/January/2010 Location: Indonesia Posts: 110 |
![]() Posted: 17/July/2010 at 12:35pm |
|
வாங்க வால் சார். பார்த்து ரொம்ப நாளாச்சே/// மலையாள தேசத்திலேயே ஐக்கியமாயிட்டீங்க போலருக்கே. சேச்சி நல்லா இருக்காங்களா? |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 16/July/2010 at 6:24pm |
|
|
பாலேரி மாணிக்கம் - ஒரு பாதிரா கொல பாதகத்தின்ட கதா. மமூட்டி நடித்த மலையாள திரைபடம். நல்ல இருந்தது, ஜீவா சார் பார்த்திருக்க கூடும். அன்பர்கள் யாராவது பார்த்தாச்சா? |
||
IP Logged |
||
|
manasaatchi
Senior Member
Joined: 11/January/2010 Location: Indonesia Posts: 110 |
![]() Posted: 09/July/2010 at 10:12am |
|
|
டாய் ஸ்டோரி 3
நிறைய கலகலப்பு.......கொஞ்சம் கலங்கவும வைத்தது. அந்தக்காலத்தில் பொம்மைக்கு ஏங்கும் மனது இன்று ஒன்றை உடைத்தால் மற்றொன்று என்று வாங்கிகொடுத்து அவர்களுக்கு அதன் ரசனை தெரியாமல் செய்து விட்டோமோ///? தி.ஜா-வின் மலர் மஞ்சத்தில் பாலி என்ற சிறுமி சாலி என்று தன் பொம்மைக்கு பேர் வைத்து விளையாடும் வர்ணனையும், அது உடைந்து போனாலும் புது பொம்மையை ஏற்காமல் பழசையே வைத்து தொடருவதும் இக்காலத்தில் உண்டா? |
||
IP Logged |
||
|
anjsanj
Senior Member
Joined: 08/January/2010 Location: India Posts: 129 |
![]() Posted: 13/April/2010 at 4:29pm |
|
|
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 02/April/2010 at 9:14am |
|
|
"ஹர்ட் லாக்கர்" பார்த்துட்டிங்களா? நான் டிவிடியில் பார்த்துட்டேன். ஹாலிவுட் சினிமாவா இதுனு கேட்கறமாதிரிதான் இருக்கு. கொஞ்சம் ஈரானியனின் படம் வாசனை தெரியுது. படம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு. பாம், தீவிரவாதிகள், தூரத்தில் வேடிக்கை பார்க்கும் ஜனங்கள், அதுல பாமை வெடிக்க வைக்கும் தீவிரவாதிகள்னு, வெடிக்கும் முன்பு அதை செயல் இழக்கவைக்கும் ராணுவத்தின் ஈ ஒ டிக்கள் என்றேபடியே செல்கிறது படம். ஆண்களை மட்டுமே பிரதானமாக வைத்து ஒரு பெண் எடுத்திருக்கும் படம் அதுவும் செம தில்லா. |
||
IP Logged |
||
|
anjsanj
Senior Member
Joined: 08/January/2010 Location: India Posts: 129 |
![]() Posted: 11/January/2010 at 10:38am |
|
|
3 இடியட்ஸ். nice.
|
||
IP Logged |
||
|
sworna
Senior Member
Joined: 04/January/2010 Posts: 276 |
![]() Posted: 11/January/2010 at 10:31am |
|
|
பில்ஸ், நம் கருத்து தளத்தை வைத்து ஒரு படம் எடுப்போமா?. டைட்டில், வரும் ஆனா
வராது. |
||
IP Logged |
||
|
csabill
Senior Member
Joined: 11/December/2005 Posts: 1867 |
![]() Posted: 08/January/2010 at 2:37pm |
|
Technology for time pass... story is very old... right from the first installment of Dune to the recent Last Samurai. But fantastic experience... watch only in 3D. |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 06/January/2010 at 9:29am |
|
|
அவதார் பார்த்திட்டிங்களா? கொஞ்சம் படத்தை பற்றி சொல்லுங்களேன்? |
||
IP Logged |
||
|
jeevatheartist
Senior Member
Joined: 05/September/2007 Posts: 1166 |
![]() Posted: 14/February/2009 at 12:28pm |
|
|
நேற்று 'பில்லு' பார்த்தேன்.
எதற்காக போனேனோ அது நன்றாகவே இருந்தது. படம் நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது ஆச்சரியம். (அதாவது நான் ரொம்ப எதிர்பார்க்கவில்லை) |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 09/February/2009 at 7:15pm |
|
|
ஒரு வேளை ஜெய மோகன் படம் நல்லாயிருக்குன்னு சொல்லியிருந்தா ஒரே பக்கத்துல படம் நல்லாயில்லைனு சொல்லியிருப்பாரோ? [QஊஓTஏ=ஜேவதெஅர்டிச்ட்] சாரு உயிர்மையில் ஸ்லம்டாக் விமர்சனம் ஏழெட்டு பக்கத்துக்கு எழுதியிருக்கிறார். ஜால்ரா சத்தம் தாங்க முடியவில்லை. ஐஸ்மழையில் இயக்குனர் முதல் இசை அமைப்பாளர் வரை குளிப்பாட்டியிருக்கிறார். அதே இதழில் இதே படத்தின் இசை கோர்வையை பற்றி ஒரு அழகான விமர்சனமும் வந்திருக்கிறது. ஷாஜி புகழ்ந்திருந்தாலும் உண்மையாக இருக்கிறது.[/QஊஓTஏ] |
||
IP Logged |
||
|
infinity
Senior Member
Joined: 08/May/2008 Posts: 367 |
![]() Posted: 08/February/2009 at 2:47am |
|
பெயரை மாற்றினால் கருத்து மாறாது. அதனால் பெயரை மாற்றலாம் :-)
Correct. But there is a limit to our liberty. [Only God, not man, can be totally free*]. The title is disrespectful to a certain section of the society. I cannot quite agree that it is the only way to express their view. In fact, that is what I thought about the whole movie. [*] - included as a teaser! |
||
IP Logged |
||
|
jeevatheartist
Senior Member
Joined: 05/September/2007 Posts: 1166 |
![]() Posted: 07/February/2009 at 10:35pm |
|
|
சாரு உயிர்மையில் ஸ்லம்டாக் விமர்சனம் ஏழெட்டு பக்கத்துக்கு எழுதியிருக்கிறார். ஜால்ரா சத்தம் தாங்க முடியவில்லை.
ஐஸ்மழையில் இயக்குனர் முதல் இசை அமைப்பாளர் வரை குளிப்பாட்டியிருக்கிறார். அதே இதழில் இதே படத்தின் இசை கோர்வையை பற்றி ஒரு அழகான விமர்சனமும் வந்திருக்கிறது. ஷாஜி புகழ்ந்திருந்தாலும் உண்மையாக இருக்கிறது. |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 06/February/2009 at 9:19pm |
|
|
என்ன அநியாம்ங்க இது "ஸ்லம் டாக் மில்லியனர்"னுங்கற டைட்டிலில் டாக் என்ற வார்த்தையை எடுத்துட்டா படத்தோட மொத்த கருத்தும் மாறிடுமா? இந்த படம் ஒரு மிஷனரி மனோபாவத்துடம் எடுக்க பட்ட படமாக இருக்கலாம். அதற்காக அந்த படத்தை விமர்சிகலாம் ஒழிய படத்து பேரை மாத்தனும் கதையை மாத்தனும்னு சொல்றது எல்லாம் ரொம்ப தப்பு. அப்பறம் எதுக்கு கருத்து சுதந்திரம், கருத்து தளம் எல்லாம்? வெங்கி ஜெயமோகனின் கருத்தை படித்து விட்டோம், சாரு என்ன சொல்றாரு "ஸ்லம் டாக்" பற்றி? |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 06/February/2009 at 9:13pm |
|
|
நாங்க எல்லாம் வீராசாமியை தியேட்டர்ல போய் பார்த்தவங்க சார். ரித்திஷ் படம் எவ்வளவோ பரவாயில்லை மணிரட்னம் படத்துக்குக்கு. ரித்திஷே தன் படத்தை பற்றியும் தன்னை பற்றியும் தமாஸாக விமர்சித்து கொள்கிறார். மணிரட்னம் எப்படினு உங்களுகே தெரியும். ஒன்றையனா படத்தை எடுத்துட்டு என்னமோ பெரிய இந்த படம் எடுத்த நினைப்புலதான் திரிவாரு. ஸ்லம் டாக் போல ஒரு படத்தை ஏன் மணிரட்னதினால் தர முடியவில்லை. ரஹ்மானை ஏன் அவர் சரியாக உபயோகிக்கவில்லை? உலக் தரத்திற்கு ஏன் அவரால் முன்னேற முடியவில்லை? ஏன் அவர் படங்களை சிறுபிள்ளை தன்மாகவே இருக்கிறது? [QஊஓTஏ=ப்லுஎசிப்] [QஊஓTஏ=வால் பையன்] பிரிய தர்ஷனுக்கு ஏன் இப்படி ஒரு தமாஷான தர்ஷன்? மணிரட்னம் எல்லாம் கலீஜான இடத்துக்கு போய்ட்டு படம் எடுக்கலாம் முடியது. எல்லாம் செட்டுலயே முடிஞ்சுடும். ஓ.. இதுதானா சேரினு மேல்தட்டு மக்கள் பார்த்துட்டுவரலாம். ஜமால் கேரக்டருக்கு அவர் சின்ன பச்சானை புடிச்சி போட்டுருப்பாரு. ஹிரோயினுக்கு இருக்குவே இருக்கு சின்ன பச்சான் சம்சாரம். அந்த படத்தை பார்க்க நான் ரித்தீஷின் "நாயகன்" பார்த்துட்டு போவேன்.[/QஊஓTஏ] ரித்திஷோட 'நாயகன்'படம் பார்க்க ரெண்டரை மணி நேரம் உட்காருவீங்களா சார்? மணிரத்னத்தைப் பத்தி எதுவும் சொல்லாம சேட்டனுக்கு தூக்கம் வராது! ஸ்லம்டாக் - இந்த படம் ஒரு கமெர்ஷியல் படத்துக்கும் டாகுமெண்ட்ரிக்கும் நடுவுல இருக்கிற படம். கட்சியமைப்புயெல்லாம் சின்ன கட்டத்துல நாலு பேர் வர்ற மாதிரி தான் இருக்கு. இது ஒரு வகையான யுக்தியான்னு தெரியல.ஏஅச்ட் இச் ஏஅச்ட், Bஎன்ட் இட் லிகெ பெcக்கம் போன்ற படங்களும் இந்த மாதிரியான காட்சியமைப்புகள் தான் இருக்கும். ஆனால் கதை சொல்லும் விதம் தான் இம்மாதிரியான படத்திற்கு பலம் என்று நினைக்கிறேன். இந்த படங்களில் எதோ ஒரு முக்கியமான விஷயம் படம் முழுக்க வியாபித்திருக்கும். [/QஊஓTஏ] |
||
IP Logged |
||
|
bluechip
Senior Member
Joined: 14/November/2005 Posts: 653 |
![]() Posted: 05/February/2009 at 11:51pm |
|
|
[QஊஓTஏ=வால் பையன்]
பிரிய தர்ஷனுக்கு ஏன் இப்படி ஒரு தமாஷான தர்ஷன்? மணிரட்னம் எல்லாம் கலீஜான இடத்துக்கு போய்ட்டு படம் எடுக்கலாம் முடியது. எல்லாம் செட்டுலயே முடிஞ்சுடும். ஓ.. இதுதானா சேரினு மேல்தட்டு மக்கள் பார்த்துட்டுவரலாம். ஜமால் கேரக்டருக்கு அவர் சின்ன பச்சானை புடிச்சி போட்டுருப்பாரு. ஹிரோயினுக்கு இருக்குவே இருக்கு சின்ன பச்சான் சம்சாரம். அந்த படத்தை பார்க்க நான் ரித்தீஷின் "நாயகன்" பார்த்துட்டு போவேன்.[/QஊஓTஏ] ரித்திஷோட 'நாயகன்'படம் பார்க்க ரெண்டரை மணி நேரம் உட்காருவீங்களா சார்? மணிரத்னத்தைப் பத்தி எதுவும் சொல்லாம சேட்டனுக்கு தூக்கம் வராது! ஸ்லம்டாக் - இந்த படம் ஒரு கமெர்ஷியல் படத்துக்கும் டாகுமெண்ட்ரிக்கும் நடுவுல இருக்கிற படம். கட்சியமைப்புயெல்லாம் சின்ன கட்டத்துல நாலு பேர் வர்ற மாதிரி தான் இருக்கு. இது ஒரு வகையான யுக்தியான்னு தெரியல.East is East, Bend it like beckham போன்ற படங்களும் இந்த மாதிரியான காட்சியமைப்புகள் தான் இருக்கும். ஆனால் கதை சொல்லும் விதம் தான் இம்மாதிரியான படத்திற்கு பலம் என்று நினைக்கிறேன். இந்த படங்களில் எதோ ஒரு முக்கியமான விஷயம் படம் முழுக்க வியாபித்திருக்கும். |
||
IP Logged |
||
|
vaal paiyan
Senior Member
Joined: 24/July/2007 Posts: 1319 |
![]() Posted: 03/February/2009 at 9:38am |
|
|
பிரிய தர்ஷனுக்கு ஏன் இப்படி ஒரு தமாஷான தர்ஷன்? மணிரட்னம் எல்லாம் கலீஜான இடத்துக்கு போய்ட்டு படம் எடுக்கலாம் முடியது. எல்லாம் செட்டுலயே முடிஞ்சுடும். ஓ.. இதுதானா சேரினு மேல்தட்டு மக்கள் பார்த்துட்டுவரலாம். ஜமால் கேரக்டருக்கு அவர் சின்ன பச்சானை புடிச்சி போட்டுருப்பாரு. ஹிரோயினுக்கு இருக்குவே இருக்கு சின்ன பச்சான் சம்சாரம். அந்த படத்தை பார்க்க நான் ரித்தீஷின் "நாயகன்" பார்த்துட்டு போவேன். |
||
IP Logged |
||
| Page of 25 Next >> |
|
||
Forum Jump |
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot delete your posts in this forum You cannot edit your posts in this forum You cannot create polls in this forum You cannot vote in polls in this forum |
|
| Powered By KnacK |